Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னர் யார்? என்ற எதிர்பார்ப்பால் சந்தை..!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (05.05.16) மாலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
 
நேற்றைய இந்திய பங்குச்சந்தையில் ஐஐபி, சிபிஐ டேட்டா போன்ற மேக்ரோ எக்னாமிக் டேட்டா சாதகமாக வெளியானதால் இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சர்வதேச சந்தைகள் சாதகமாக நிலவியதால்  இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வந்தன. இந்த நிலையில் இந்த வாரத்தில் அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னர் யார் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்ற செய்திகள் வெளியானதால் சந்தைகள் ப்ளாட் ஆக முடிவடைந்தது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 7.04 புள்ளிகள் உயர்ந்து 27,815.18 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 1.55 புள்ளிகள் குறைந்து 8519.50 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா ஸ்டீல் 356.05 4.02%
கெயில் 392.55 3.78%
ஓஎன்ஜிசி 233.90 2.63%
கோல் இந்தியா 324.25 2.27%
ஐடியா செல்லுலார் 106.45 2.06%
 
விலை குறைந்த பங்குகள்
 
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 161.45 -3.09%
பிபிசிஎல் 545.50 -2.64%
இன்டஸ் இன்ட் வங்கி 1,102.90 -1.98%
அல்ட்ராடெக் சிமென்ட் 3,426.00 -1.76%
லூபின் 1,645.00 -1.72%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close