Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்போசிஸ் தாக்கம் எதிரொலி சென்செக்ஸ் சரிவு!

 

காலை 10:30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (15.07.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவு வெளியானது. இதில் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் 4.47 சதவிகிதம் சரிந்து ரூ.3,436 கோடியாக குறைந்து இருந்தது. இது இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.3,597 இருந்தது. இதனால் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் 8 சதவிகிதத்துக்கும் மேல் சரிவடைந்து ரூ.1074.30 புள்ளிகளாக இருந்தது. இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் சரிவால் மற்ற ஐடி நிறுவனத்தின் பங்குகளும் சரிவடைந்து காணப்படுகிறது. இதன் தாக்கமாக இந்திய பங்குச்சந்தைகளும்ௐ இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சரிவடைந்து காணப்படுகிறது. 

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 113.69 புள்ளிகள் சரிந்து 27,828.92 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 28.95 புள்ளிகள் சரிந்து  8537.20 என்ற நிலையில் வர்த்தகமானது 

 

விலை அதிகரித்த பங்குகள்

 

டாடா மோட்டார்ஸ் 499.80 2.82%

அதானி துறைமுகங்கள் 222.85 2.74%

எம்.எம் 1,474.00 1.85%

டாடா ஸ்டீல் 365.70 1.78%

டாடா மோட்டார்ஸ் (டி) 316.30 1.66%

 

விலை குறைந்த பங்குகள்

 

இன்போசிஸ் 1,073.60 -8.73%

என்டிபிசி 154.90 -2.39%

டெக் மஹிந்திரா 507.10 -2.13%

டிசிஎஸ் 2,470.40 -2,04%

விப்ரோ 563.05 -1.32%

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ