Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்க ஆகாயத்துல பறக்கப்போறீங்களா? 1 ரூபாய்க்கு விமான பயணம் அறிமுகம்!

உள்நாட்டு விமான போக்குவரத்து பிரிவில் 'ஏர் கார்னிவல்' என்ற பெயரில் புதிய ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
 
கோவையை தலைமையகமாகக் கொண்ட ஏர் கார்னிவல் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மணீஷ்குமார் சிங் கூறுகையில்,"எங்கள் நிறுவனத்துக்கு உள்நாட்டு விமான சேவை துவக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. கோவை-சென்னை, சென்னை-மதுரை வழித்தடங்களில், விமான சேவை வழங்க திட்டமிட்டுள்ளோம். கோவையிலிருந்து சென்னைக்கு முதல் விமான சேவையை வரும் 18ம் தேதி துவக்க உள்ளோம். 72 பேர் பயணிக்கக் கூடிய ஏ.டி.ஆர் ரக விமானத்தில் அறிமுக சலுகையாக அன்று ஒரு நாள் மட்டும் ஒரு ரூபாய் (வரிகள் தவிர்த்து) டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ