Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறப்பு புலனாய்வுக் குழு பரிந்துரை; கருப்புப் பணத்தை ஒழிக்க அரசு இதை அமல்படுத்துமா?

நம் நாட்டில் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனை எதுவும் ரொக்கமாக இருக்கக் கூடாது. இதுமட்டுமின்றி இதேபோல தனி நபர்களிடம் ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான தொகை கையிருப்பில் இருக்க அனுமதிக்கக்கூடாது என்று சிறப்புப் புலனாய்வுக்குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.
 
 
கருப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா உள்ளார். இந்த குழு தனது ஐந்தாவது பரிந்துரையை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
 
இந்த பரிந்துரையில் இந்தியாவில் பெருமளவிலான தொகை அல்லது கணக்கில் காட்டப்படாத சொத்துகள் பெரும்பாலும் ரொக்க கையிருப்பாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று இந்த குழு குறிப்பிட்டுள்ளது. இந்த குழு அளித்துள்ள பரிந்துரையில் ரூ. 3 லட்சத்துக்கு மேலான எந்த பரிவர்த்தனையும் ரொக்கமாக நடைபெறக் கூடாது. அவ்விதம் நடைபெறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அதற்குரிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
 
ரூ.3 லட்சத்துக்கு மேலான பரிந்துரைகள் நடைபெற்றால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி, அவ்விதம் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close