Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐடி ஸ்டாக்ஸ் டவுன்; மார்க்கெட் டவுன்!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (15.07.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
 
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 100 புள்ளிகள் வரை அதிகரித்து காணப்பட்டது. நுகர்வோர் சாதனங்கள், நுகர்வோர் பொருட்கள், தொழில்நுட்பம், ரியாலிட்டி மற்றும் சுகாதாரம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியாகி வருவாய் குறைந்து இருந்ததால் அந்நிறுவனம் பங்குச்சந்தையில் 8.82 புள்ளிகள் வரை சரிந்து காணப்பட்டது. இதனால் ஐடி நிறுவனத்தின் டிசிஎஸ், விப்ரோ, டெக் மகேந்திரா பங்குகளும் குறைந்தது. இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச்சந்தைகளும் சரிவில் முடிவடைந்தது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 105.61 புள்ளிகள் சரிந்து 27,836.50 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 23.60 புள்ளிகள் சரிந்து  8541.40 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா ஸ்டீல் 372.90 3.79%
பார்தி ஏர்டெல் 378.90 3.26%
ஐடியா செல்லுலார் 3.25 111.10%
போஷ் 23,907.60 2.04%
ஹெச்டிஎப்சி 1,364.10 2.03%
 
விலை குறைந்த பங்குகள்
 
இன்போசிஸ் 1,072.55 -8.82%
டிசிஎஸ் 2,445.35 -3.04%
விப்ரோ 554.50 -2.82%
டெக் மஹிந்திரா 504.05 -2.72%
அரவிந்தர் ஃபார்ம் 761.50 -1.84%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ