Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி!

இந்த வாரம் செனா, மஞ்சள், சீரகம் விலை போக்கு குறித்து அலைஸ் ப்ளூ நிறுவனத்தின் தலைவர் கே.ராஜேஷ் கூறுகிறார்.
 
 
சென்னா! 
 
சென்னா ஆகஸ்ட் 19-ம் தேதி கான்ட்ராக்ட் கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 8870 என்ற நிலையிலும், குறைந்தபட்சமாக 8405 என்ற நிலையிலும் வர்த்தகமானது. இன்னும் சென்னாவின் தேவை சந்தையில் அதிகமாகவே உள்ளது. எனவே, சென்னாவின் விலை இந்த வாரத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னாவைப் பொறுத்தவரை, 9000 என்ற நிலை வரை எதிர்பார்க்கலாம். அதே சமயம், வீக்லி சார்ட்டில் கணிசமாக வீழ்ச்சி அடையும்பட்சத்தில் மட்டுமே சென்னா விலை அதிகளவில் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மஞ்சள்!
 
மஞ்சள் ஆகஸ்ட் 19-ம் தேதி கான்ட்ராக்ட் கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 8114 என்ற நிலையிலும், குறைந்தபட்சமாக 7827 என்ற நிலையிலும் வர்த்தகம் ஆனது. மஞ்சள் வீக்லி சார்ட்டில் ஸ்ட்ராங் புல்லீஸ் பேட்டன் பார்ம் ஆகி வருகிறது. இது மட்டுமின்றி, நீண்ட காலத்துக்கான சப்போர்ட் லெவல் உருவாகி வருகிறது. ஆகையால் வரும் வாரங்களில் மஞ்சள் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. மஞ்சள் விலையைப் பொறுத்தவரை, 9748 என்ற நிலை வர வாய்ப்புள்ளது. ஆனால், மஞ்சள் விலையைப் பொறுத்தவரை, 7,825 என்ற நிலையை உடைக்கும்பட்சத்தில் மட்டுமே புதிய குறைந்தபட்ச அளவான 6713 என்ற நிலையை எட்ட வாய்ப்புள்ளது. 
 
சீரகம்!
 
சீரகம் ஆகஸ்ட் 19-ம் தேதி கான்ட்ராக்ட் கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 19400 என்ற நிலையிலும், குறைந்தபட்சமாக 18555 என்ற நிலையிலும் வர்த்தகம் ஆனது. தற்சமயம் சீரகம் விநியோகம் குறைந்தளவிலேயே இருப்பதால், இதன் விலை அதிகரிக்கலாம். இது மட்டுமின்றி, அனைத்து விவசாய சம்பந்தமான கமாடிட்டி பொருட்கள் தேவை மிக அதிகமாக இருப்பதால், மஞ்சள் விலை 19400 என்ற நிலையை கடக்கும்பட்சத்தில் 23000 என்ற நிலை வரை வரும் என எதிர்பார்க்கலாம்.
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ