Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகல்; இந்தியாவுக்கு சாதகமே! எப்படி?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக பிரிட்டன் அண்மையில் தெரிவித்தது. இதனால் சர்வதேச அளவில் பொருளாதாரம் பாதிக்கப்படும்; இந்திய சந்தை தடுமாறும் என்று கூறப்பட்டது. ஆனால், ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் செயல் தலைவர் மார்க் மொபிஸ் இதனால் இந்தியாவுக்கு எந்த ஒரு பாதகமும் இல்லை, சாதகமே என்று தெரிவித்துள்ளார்.
 
 
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்," ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியதால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பாதகம் ஏற்படுமே தவிர, ஆனால் அடிப்படை பொருளாதாரம் நன்றாக உள்ள குறிப்பிட வளர்ந்து வரும் நாடுகளுக்கு எந்த ஒரு பாதகமும் ஏற்படாது. உண்மையை சொல்லவேண்டுமெனில் பிரெக்ஸிட் நிகழ்வு வளர்ந்து வரும் சந்தைகளுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரெக்ஸிட் நிகழ்வு எதை காட்டுகிறது என்றால் வளர்ந்து வரும் சந்தைகளில் மட்டும் அரசியல் உறுதியற்ற தன்மை ஏற்படும் என்பது இல்லை; வளர்ந்த நாடுகளில் கூட அரசியல் உறுதியற்ற தன்மை நிலவும் என்பதை தெளிவாக காட்டுயுள்ளது. பிரெக்ஸிட் நிகழ்வின் மத்தியிலும் கடந்த ஜூன் வரையிலான முதல் காலாண்டில் சர்வதேச அளவில் இந்தியா மட்டுமே மிகச் சிறப்பாக செயல்பட்டது." என்று கூறினார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ