Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழைக்கால கூட்டத்தொடர்; ஜிஎஸ்டி எதிர்பார்ப்பால் சந்தை அதிகரிப்பு!

காலை 10 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (18.07.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
 
கடந்த வெள்ளிக்கிழமை இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியாகி வருவாய் குறைந்து இருந்ததால் அந்நிறுவனம் பங்குச்சந்தையில் 8.82 புள்ளிகள் வரை சரிந்து காணப்பட்டது. இதனால் ஐடி நிறுவனத்தின் டிசிஎஸ், விப்ரோ, டெக் மகேந்திரா பங்குகளும் குறைந்தது. இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச்சந்தைகளும் சரிவில் முடிவடைந்தது. இந்த நிலையில் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இதில் சரக்கு மற்றும் சேவை வரி நிறைவேற்றப்படும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பால் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. இதுமட்டுமின்றி கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரித்து வருவதாலும் சந்தை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 135.72 புள்ளிகள் உயர்ந்து 27,972.86 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 30.35 புள்ளிகள் உயர்ந்து 8572.50 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
மாருதி சுசூகி 4,550.95 1.76%
டாடா மோட்டார்ஸ் 502.40 1.70%
ரிலையன்ஸ் 1,028.90 1.65%
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,041.55 1.53%
ஆக்சிஸ் வங்கி 573.00 1.41%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஆரோபிந்தோ பார்மா 751.65 -1.29%
அதானி துறைமுகங்கள் 218.15 -1.07%
ஓஎன்ஜிசி 227.80 -1.06%
சிப்லா 512.00 -0.85%
விப்ரோ 549.85 -0.84%

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close