Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது; ஜிஎஸ்டி நிறைவேறுமா? நாடாளுமன்றத்தில் அனல் பறக்குமா?

நாடாளுமன்ற மழைக்கால காலக் கூட்டத்தொடர் இன்று (18.07.16) கூடுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில், ஜிஎஸ்டி உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
 
 
நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 20 முதல் 25 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஜிஎஸ்டி மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை சில பிராந்தியக் கட்சிகள் விலக்கிக் கொண்டதால், இந்த மழைக்கால கூட்டத் தொடரிலேயே ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு உள்ளது. இதனிடையே ஜிஎஸ்டி மசோதா மிக முக்கியம். அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
 
இது, மத்திய அரசு பெருமை தேடுவதற்காக அல்ல; நாட்டின் நலனே முக்கியம். மசோதாக்களை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். எனினும் இந்த கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ