Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய்மல்லையாப் போல இவ்வளவு நபர்களா? அனைவரது பெயரும் பகிரங்கமாக நாளை அம்பலம்!

பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி வேண்டுமென்றே பணத்தை திருப்பி செலுத்தாத 7,000 பேரைக்கொண்ட பட்டியலை நாளை (19.07.16) அம்பலப்படுத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
 
 
பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி வேண்டுமென்றே பணத்தை திருப்பி செலுத்தாமல் இருப்பவர்களின் பெயரை வெளியிடாமல் மத்திய அரசு பாதுகாத்து வருவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் கடனை திருப்பி செலுத்தாமல் இருக்கும் 7,000 பேரைக் கொண்ட பட்டியலை பெயருடன் வெளிவிடுவதாக இந்த சங்கத்தின் பொதுச்செயலாளார் வெங்கடாச்சலாம் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,"பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி வேண்டுமென்றே பணத்தை கட்டாதவர்கள் என 7,000 பேர் உள்ளனர். கடந்த மார்ச் 2016 ம் தேதி கணக்கீட்டின்படி இவர்கள் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத பணம் ரூ.70,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதுபோன்ற பொதுத்துறை வங்கிகளில் கடன்வாங்கிவிட்டு பணத்தை திருப்பி செலுத்தாமல் இருப்பவர்களின் பெயரை வெளியே கொண்டு வரப்பட வேண்டும். வங்கி ஊழியர் சங்கம் இவர்கள் பெயரை அம்பலப்படுத்தும்"என்று கூறினார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ