Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேட்காவால் ரூ. 1 லட்சம் கோடி முடங்கும் அபாயம்!

ஃபேட்கா நடைமுறையை வருகிற ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால், மியூச்சுவல் ஃபண்டில் கிட்டதட்ட ரூ.1 லட்சம் கோடி முடங்கும் அபாயம் உண்டாக வாய்ப்புள்ளது.  
 
 
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, வெளிநாட்டு கணக்கு வரி இணங்குதல் சட்டம் (Foreign Account Tax Compliance Act (FATCA) கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் படி இந்தியர்கள் வெளிநாட்டில் தாங்கள் வைத்திருக்கும் சொத்துக்கள் மற்றும் செய்திருக்கும் முதலீடுகள் பற்றிய குறிப்புகளை வங்கிகளிடமும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிடமும் தர வேண்டும். ‘இந்த நாட்டை சேர்ந்த இன்னார் ஆகிய நான் வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி இருக்கிறேன், முதலீடு செய்திருக்கிறேன்’ என்று சொல்வதுதான் இந்த ஃபேட்கா.
 
இதனால் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்தத் துறையின் கணிப்புப்படி ஃபேட்கா நடைமுறையைத் தாக்கல் செய்யாமல் 54 லட்சம் ஃபோலியோக்கள் உள்ளன. இவற்றின் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ. 1.08 லட்சம் கோடி ஆகும். 
 
அரசின் அறிவிப்புப்படி ஃபேட்கா நடைமுறையைத் தாக்கல் செய்யாத கணக்குகளை குளோஸ் செய்தால் ரூ. 1.08 லட்சம் கோடியும் முடங்கும் அபாயம் இருக்கிறது. மாறாக தற்காலிகமாக அந்தக் கணக்குகளை முடக்கி வைக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பு (ஆம்ஃபி) இந்த யோசனையை நிதி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. 
 
ஆம்ஃபி-யின் முதன்மை செயல் அதிகாரி சி.வி.ஆர். ராஜேந்திரன் தங்களுடைய கோரிக்கையை நிதி அமைச்சகம் ஏற்றுக்கொண்டு சாதகமான முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார். அவரது கோரிக்கையின்படி நிதி அமைச்சகம் முடிவெடுத்தால் இந்த ரூ. 1.08 லட்சம் கோடி தப்பிக்கும். 
ஃபேட்கா அறிமுகப்படுத்தப்பட்ட ஆகஸ்ட் 31, 2015-க்குப் பிறகு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்
முதலீட்டாளர்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது வெளிநாட்டு சொத்துகள் மற்றும் முதலீடுகளைப் பதிவு செய்யுமாறு கூறியுள்ளது.
 
இந்த நிலையில் பெரும்பாலானோர் இந்தச் சட்டம் அமெரிக்கர்களுக்கு மட்டும்தான் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லை, முதலீட்டாளர்கள் அனைவரும் ஃபேட்கா நடைமுறையைக் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close