Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எப்எம்சிஜி பங்குகள் விற்பனையால் சந்தை ப்ளாட்!

 
காலை 10 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (19.07.16) காலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது.
 
 
நேற்றைய வர்த்தகத்தின் போது மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதால் சரக்கு மற்றும் சேவை வரி நிறைவேற்றப்படும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு போன்ற காரணங்களால் காலை நேர வர்த்தகத்தில் சந்தை அதிகரித்து காணப்பட்டது. அதன்பின் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகள் விற்பனை மற்றும் மூலதன பொருட்கள், எண்ணெய் & எரிவாயு மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததால் சந்தை இறக்கத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று எப்எம்சிஜி நிறுவனத்தின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதால் சந்தை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதால் சந்தை இறக்கத்தில் காணப்படுகிறது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 11.78 புள்ளிகள் உயர்ந்து 27,758.44 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 4.70 புள்ளிகள் உயர்ந்து 8513.40 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா மோட்டார்ஸ் 501.25 1.75%
ஜீ மகிழ்விக்க 468.80 1.68%
ஐடியா செல்லுலார் 105.35 1.44%
ஹிண்டால்கோ 139.10 1.35%
டாடா மோட்டார்ஸ் (டி) 319.00 1.30%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஹெச்யூஎல் 901.60 -2.21
பேங்க் ஆப் பரோடா 157.40 -1.04 
ஐடிசி 246.80 -0.84%
ஹெச்டிஎப்சி 1,336.50 -0.73%
இன்டஸ் இன்ட் வங்கி 1,123.00 -0.70%
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close