Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைப் ஐபிஓ வெளியீட்டுக்கு தயார்!

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொண்டு ரூ.5,000 கோடி திரட்ட அனுமதி கோரி இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.
 
 
ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸில் ஐசிஐசிஐ வங்கி கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 12.65 சதவிகிதத்தை விற்பனை செய்ய அவ்வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி, பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் 18,13,41,058 பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம், ரூ.5,000 கோடி திரட்ட உள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
 
ஐசிஐசிஐ வங்கியின் துணை நிறுவனம் ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி 68 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது. மேலும், 26 சதவிகித பங்குளை பிரிட்டனின் புருடென்ஷியல் கார்ப்பரேஷனும், எஞ்சியுள்ள பங்குகளை சிங்கப்பூரின் டிமாசெக் அண்ட் பிரேம்ஜிஇன்வெஸ்ட் நிறுவனமும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ