Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

8% க்கும் மேல் வளர்ச்சி சாத்தியமே; எப்படி? காரணம் கூறுகிறார் அரவிந்த் சுப்பிரமணியன்!

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் 8 சதவிகிதத்துக்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்தை அடைய சாத்தியம் இருப்பதாக மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
 
இப்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதம் என்றளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. சர்வதேச அளவில் பொருளாதார சூழல் திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பது அடுத்த 10 ஆண்டுகளில் 8 சதவிகிதத்துக்கும் மேல் வளர்ச்சியடைய சாத்தியம் உள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 6.5 சதவிகிதம் என்றளவில் வளர்ச்சியடைந்து வருவதாக அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ