Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.22,915 கோடி; மத்திய அரசு ஒதுக்கியதற்கு காரணம் இதுதான்!

பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதற்காக மத்திய அரசு ரூ.22,915 கோடி ஒதுக்கியுள்ளது. இதன்காரணமாக இந்திய பங்குச்சந்தையில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் உச்சத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
 
 
13 பொதுத்துறை வங்கிகளின் திரும்பி வராத கடன் நிலுவைகளை சமாளிக்க உதவும் வகையிலும், அவர்களுடைய மூலதனத்தை அதிகரிக்கும் வகையிலும் ரூ.22,915 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 75 சதவிகிதம் பண ஒதுக்கீடு உடனடியாக செய்யப்படும் என்றும், மீதி 25 சதவிகிதம் பணம் வங்கிகளின் செயல்திறனை பொறுத்து வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
 
இவ்வாறு ஒதுக்கப்பட்ட தொகையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு அதிகபட்சமாக ரூ.7,575 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.3,101 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.2,816 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கீழே 13 பொதுத்துறை வங்கிகளுக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP