Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயர்ந்தது சந்தை... வங்கிகளுக்கு நிதி ஒதுக்கீடால்!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (19.07.16) மாலை நேர வர்த்தகத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி ஒதுக்கீடால் ஏற்றத்தில் நிறைவடைந்தது.
 
 
 
இன்று காலை நேர வர்த்தகத்தின்போது எப்எம்சிஜி நிறுவனத்தின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால் சந்தை இறக்கத்தில் வர்த்தகமானது. அதன்பின் வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதற்காக 13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.22,915 கோடி மத்திய அரசு ஒதுக்கியது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் அதிகரித்து காணப்பட்டது. இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைந்தது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 40.96 புள்ளிகள் உயர்ந்து  27,787.62 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 19.85 புள்ளிகள் உயர்ந்து 8,528.55 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பிபிசிஎல் 572.15 2.88%
ஐடியா செல்லுலார் 106.30 2.36%
ஐசிஐசிஐ வங்கி 269.15 2.18%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 166.40 1.96%
டாடா மோட்டார்ஸ் (டி) 320.90 1.91%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஹெச்யூஎல் 895.15 -2.91%
இன்டஸ் இன்ட் வங்கி 1,107.15 -2.10%
யெஸ் பேங்க் 1,153.35 -1.80%
எய்கர் மோட்டார்ஸின் 19,709.95 -1.22%
ஆக்சிஸ் வங்கி 565.45 -0.97%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ