Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பதி எழுமலையானைத் தொடர்ந்து இந்த விநாயகருக்கு புதிய டீமேட் கணக்கு; இனி பக்தர்கள் காணிக்கையாக பங்குகளையும் செலுத்தலாம்!

உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கடவுளாக விளங்கும் திருப்பதி வெங்கடாஜலபதி பெயரில் புதிய டீமேட் கணக்கை அக்கோவில் அமைப்பான திருமலை திருப்பதி தேவஸ்தானம்  கடந்த ஆண்டு ஆகஸ்ட மாதம் துவங்கியது. இதன் மூலம் இனி பக்தர்கள் கடவுளின் பெயரிலேயே பங்குகளை காணிக்கையாகச் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இதேப்போலவே மும்பை ஸ்ரீ சித்தி விநாயக் கணபதி ஆலயம் பெயரிலும் டீமேட் கணக்கு திறக்கப்பட்டுள்ளது. 
 
 
பல வருடமாகத் திருப்பதி உண்டியல்களில் பக்தர்கள் கடவுள் பெயரில் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களைச் செலுத்தி வந்தனர், இதனை முறைப்படுத்தவே திருப்பதி தேவஸ்தானம் புதிய டீமேட் கணக்கை திறந்துள்ளது. இதைப்போலவே பக்தர்கள் மும்பை ஸ்ரீ சித்தி விநாயக் கணபதி ஆலயம் கோவிலிலும் பங்குகள் மற்றும் பத்திரங்களை செலுத்தி வந்தனர். 
 
இந்த நிலையில் மும்பை ஸ்ரீ சித்தி விநாயக் கணபதி ஆலயம்  12047200 11413505 என்ற எண்ணில் டீமேட் கணக்கை திறந்துள்ளது. இனி பக்தர்கள் பங்குகள் மற்றும் பத்திரங்களை கடவுளின் பெயரிலேயே செலுத்தலாம் என்று மும்பை சித்தி விநாயக் கணபதி ஆலய தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ