Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 100 புள்ளிகள் அதிகரிப்பு!

காலை 9.45 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (20.07.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
 
நேற்றைய பங்குச்சந்தையில் 13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.22,915 கோடி மத்திய அரசு ஒதுக்கியது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் அதிகரித்து காணப்பட்டது. இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை அதிகரித்து காணப்பட்டது. எச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், ஐடிசி, டிசிஎஸ், எல் அண்ட் டி போன்ற நிறுவனத்தின் பங்குகள் உச்சத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 89.16 புள்ளிகள் உயர்ந்து 27,877.65 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 22.75 புள்ளிகள் உயர்ந்து 8551.85 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அரவிந்தர் ஃபார்ம் 782.40 2.85%
ஹெச்டிஎப்சி வங்கி 1,238.00 1.61%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 168.65 1.35%
ஹீரோ மோட்டோகார்ப் 3,269.20 1.18%
போஷ் 24,660.30 1.11%
 
விலை குறைந்த பங்குகள்
 
விப்ரோ 524.10 -4.58%
ஹெச்சிஎல் டெக் 719.20 -1.50%
ஐசிஐசிஐ வங்கி 266.60 -0.95%
இன்போசிஸ் 1,080.05 -0.63%
பார்தி இன்ப்ராடெ 354.95 -0.52%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ