Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

8,167 பேர் ரூ.76,600 கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை; அருண் ஜேட்லி தகவல்

நம் நாட்டில் 8,167 பேர் கடனைத் திருப்பி செலுத்தும் திறன் இருந்தும் ரூ.76,685 கடனை திருப்பி செலுத்தவில்லை என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
 
 
இது குறித்து மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது அருண் ஜேட்லி நேற்று கூறுகையில்,"வங்கிகளின் வாராக்கடனை வசூலிக்கும் சட்டம் தொடர்பாக தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்து வருகிறது. இதன் மூலம் வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும், வாராக்கடன் நிலைமைகளை சமாளிக்க இதன் மூலம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். கடனைத் திருப்பி செலுத்தும் திறன் இருந்தும் 8,167 பேர் ரூ.76,685 கடனை திருப்பி செலுத்தவில்லை. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் 1,724 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ