Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்வி கடன் பிரச்சினை எதிரொலி; எஸ்பிஐ தலைமை அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை!

கல்வி கடனை திரும்ப கட்டச்சொல்லி டார்ச்சர் செய்த எஸ்பிஐ வங்கியால் எழில் என்பவர் கடந்த வாரம் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் கல்விக்கடனை செலுத்த முடியாமல் மதுரையில் பட்டதாரி தற்கொலை செய்துகொண்டதால் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
 
மதுரை அனுப்பானடி ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் எழில். இவர் சிவில் பொறியாளராக பட்டம் முடித்து ஒரு ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், கல்விக்காக இவர் வங்கியில் வாங்கிய கடன் 1 லட்சத்தி 90 ஆயிரத்தை கட்ட சொல்லி நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் மனமுடைந்த அவர் கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். இது கல்விக்கடன் வாங்கியவர்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித்தலைவர்களும் மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என அறிக்கை வெளியிட்டனர். 
 
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். கல்விக்கடனை செலுத்த முடியாமல் மதுரையில் பட்டதாரி தற்கொலை செய்துகொண்டதால் போராட்டம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close