Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடி; கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ்

கூகுள் தேடுதளத்தில் "Top 10 criminals in the world" என்று தேடுகையில் அதில் பிரதமர் மோடியின் புகைப்படம் வருகிறது. இது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் கூகுளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
 
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்த வழக்கறிஞர் சுஷில் குமார் மிஸ்ரா அலகாபாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 2015ம் ஆண்டு கூகுளில் உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலை தேடியபோது பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வந்தது. இதையடுத்து மோடியின் புகைப்படத்தை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியும் பயனில்லை.
 
எனவே, மோடியின் புகைப்படத்தை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்த கூகுள் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக கூகுள் நிறுவனம், அதன் சிஇஓ மற்றும் அந்நிறுவனத்தின் இந்தியா பிரிவு தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ