Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பருவமழை எதிர்பார்ப்பு, ப்ளூசிப் பங்குகளால் சந்தை அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (20.07.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
 
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சற்று ப்ளாட் ஆக தொடங்கி இருந்தாலும் 10 மணி நிலவரத்தின்போது சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை அதிகரித்து காணப்பட்டது. எச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், ஐடிசி, டிசிஎஸ், எல் அண்ட் டி போன்ற நிறுவனத்தின் பங்குகள் சற்று ஏற்றத்தில் வர்த்தகமாகின. இந்த நிலையில் பருவமழை எதிர்பார்ப்பு மற்றும் முதலீட்டாளர்கள் ப்ளூசிப் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கியதால் சந்தை 120 புள்ளிகளித்தாண்டி ஏற்றத்தில் நிறைவடைந்தது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 128.27 புள்ளிகள் உயர்ந்து 27,915.89 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 37.30 புள்ளிகள் உயர்ந்து  8565.85 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஆரோபிந்தோ பார்மா 798.05 4.91%
கோல் இந்தியா 329.25 3.23%
பி.எச்.இ.எல் 144.15 3.11%
டாடா பவர் 72.35 2.77%
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,676.65 2.53%
 
விலை குறைந்த பங்குகள்
 
விப்ரோ 538.85 -1.89%
ஹிண்டால்கோ 135.90 -1.52%
ஆக்சிஸ் வங்கி 558.25 -1.,27%
டாடா மோட்டார்ஸ் 493.90 -1.07%
ஐடியா செல்லுலார் 105.35 -0.89%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ