Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திகட்ட திகட்ட கற்றுக்கொண்டோம்! ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் நெகிழ்ந்த வாசகர்கள்

நாணயம் விகடனும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பும் (FIEO-Federation Of Indian Export organization) இணைந்து ‘ஏற்றம் தரும் ஏற்றுமதி’ என்ற இரண்டு நாள் பயிற்சி வகுப்பினை ஏழாவது முறையாக கடந்த ஜூலை 16, 17 தேதிகளில் சென்னையில் நடத்தியது.
 
 
இந்த பயிற்சி வகுப்பில் முதலில் பேசிய இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென் மண்டல உதவி இயக்குநர் திருமதி செல்வநாயகி,“சரிவில் இருந்த இந்திய ஏற்றுமதி கடந்த மாதத்தில் மீண்டும் ஏற்றமடைய தொடங்கியிருக்கிறது. ஏற்றுமதியைப் பொறுத்தவரை ஏற்றுமதியாளர்களின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தான் முக்கியம். உங்களூக்கு உதவி செய்யத்தான் பல புரமோஷனல் கவுன்சில்கள் செயல்படுகின்றன. அவற்றிடம் உறுப்பினராகி உங்களூக்கு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என்றார். 
 
அவரைத் தொடர்ந்து ஏற்றுமதி தொழில் தொடங்குவதற்கு தேவையான அடிப்படைகளையும், சட்ட ரீதியான நடைமுறைகளையும் விரிவாக பேசி வழக்கறிஞர் எஸ்.சிவராமன், இந்தியப் பொருட்களின் பயன்பாடுகளைப் பற்றி இந்தியர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவற்றில் உள்ள தொழில் வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றார்.
 
பின்னர் 20 ஆண்டுகளாக, ஏறக்குறைய 60க்கும் மேற்பட்ட பொருட்களை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யும் புளுபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கமாலுதீன் தன்னுடைய சொந்த அனுபவங்களை, ஏற்றுமதி தொழிலில் செய்யக் கூடாத தவறுகளை எல்லாம் புட்டு புட்டு வைத்தார். சவால்கள் நிறைந்த ஏற்றுமதி தொழிலை எப்படி நெளிவுசுழிவுகளுடன் வெற்றிகரமாக செய்வது என்பதை விளக்கமாக எடுத்து கூறினார். 
 
 
இறக்குமதியாளரின் நம்பகத்தன்மை மற்றும் நாம் அனுப்பும் பொருளுக்கான காப்பீடு எப்படி செய்துகொள்வது போன்றவை குறித்து இ.சி.ஜி.சி.-ன் (ECGC) ஓய்வுபெற்ற துணை பொது மேலாளர் ஆர்.சத்தியநாராயணன் பேசினார். 
 
பயிற்சியின் முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது பேசிய வாசகர்கள் 'பெரிதாக என்ன இருக்கப் போகிறது என்ற சந்தேகத்திலேயே வந்தோம், ஆனால் திகட்ட திகட்ட கற்றுக்கொண்டோம்' என்று நெகிழ்ந்தனர். இறுதியாகப் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பயிற்சியாளர்கள் பதிலளித்தனர். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ