Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குளோபல் மார்க்கெட் அப்; ஆனால் சென்செக்ஸ் டவுன்!

காலை 10 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (21.07.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
 
நேற்றைய இந்திய பங்குச்சந்தை பருவமழை எதிர்பார்ப்பு மற்றும் முதலீட்டாளர்கள் ப்ளூசிப் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கி குவித்ததால் சென்செக்ஸ் 120 புள்ளிகளைத் தாண்டி ஏற்றத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தின்போது சர்வதேச சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி வந்தபோதிலும் சென்செக்ஸ் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. வர்த்தக தொடக்கத்தின்போது சென்செக்ஸ் 60 புள்ளிகள் வரை அதிகரித்து காணப்பட்டது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 31.64 புள்ளிகள் சரிந்து 27,882.11 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 7.60 புள்ளிகள் சரிந்து  8558.65 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பிபிசிஎல் 586.85 2.15%
ஏசிசி 1,659.70 1.71%
ஆரோபிந்தோ பார்மா 810.85 1.60%
அம்புஜா சிமென்ட்ஸ் 264.70 1.03%
ஐடிசி 252.75 1.00%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஆக்சிஸ் வங்கி 547.40 -1.94%
ஹெச்சிஎல் டெக் 721.30 -1.19%
பி.எச்.இ.எல் 142.55 -1.11%
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,645.90 -0.84%
லார்சன் 1,558.00 -0.82%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close