Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல் நாளிலேயே எல் & டி இன்போடெக் கதி?

எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் சமீபத்தில் பொதுப்பங்கு வெளியிட்டது. இன்று வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் முதல் நாளிலேயே இந்த நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகிய இரண்டு சந்தையிலும்  எல் & டி இன்போடெக் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 2011-ம் ஆண்டுக்கு பிறகு 10 லட்சம் விண்ணப்பங்களை தொட்ட நிறுவனம் இதுதான். ஒரு பங்குக்கு ரூ.705-710 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இன்று வர்த்தகத்தை தொடங்கிய எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தின் பங்குகள் 6 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிவை சந்தித்து ரூ.666.60 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இந்த ஐபிஓ கடந்த வாரம் 11 மடங்குக்கும் அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
 
எல் அண்ட் டி இன்போடெட் ஐபிஓ-வைப் பொறுத்தவரை ஐபிஓ வருவதற்கு முன் பலத்த வரவேற்பைப் பெற்று 11  மடங்குக்கும் அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று வர்த்தகத்தை தொடங்கிய இந்த பங்கு முதல் நாளிலேயே 6 சதவிகிதத்துக்கும் குறைவாக வர்த்தகம் ஆகி வருகிறது. இந்த நிலையில் முதல் நாளிலேயே இந்த நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
****************
 
இன்றைய வர்த்தகத்தின் இறுதியில்  எல் & டி இன்போடெக் பங்குகள்  அதிகபட்சமாக 12.35 சதவிகிதம் வரை குறைந்து ரூ.697.65 ஆக நிறைவடைந்தது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ