Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யார் யார் எவ்வளவு கோடி? கடன் வாங்கி திருப்பி செலுத்தாவர்களின் பட்டியல் வெளியீடு!

 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்கி வேண்டுமென்றே பணத்தை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ளது.

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்கி வேண்டுமென்றே பணத்தை திருப்பி செலுத்தாமல் இருப்பவர்களின் பெயரை வெளியிடாமல் மத்திய அரசு பாதுகாத்து வருவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியது. இந்த நிலையில் கடனை திருப்பி செலுத்தாமல் இருக்கும் 5,610 பேரைக் கொண்ட பட்டியலை பெயருடன் வெளியிட்டுள்ளது.
 
இது குறித்து வங்கி ஊழியர் சங்க தலைவர் வெங்கடாச்சலம் கூறுகையில்,"பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்கி வேண்டுமென்றே பணத்தை கட்டாதவர்கள் என 5,610 பேர் உள்ளனர். கடந்த மார்ச் 2016 ம் தேதி கணக்கீட்டின்படி இவர்கள் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத பணம் ரூ.58,792 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
இதில் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்கள் 3,192 பேர். இவர்கள் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத பணம் ரூ.28,775 கோடியாக அதிகரித்துள்ளது.  பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாவர்கள் பட்டியலில் வின்ஸோம் டைமெண்ட்ஸ் அண்ட் ஜூவல்லரி லிட் நிறுவனம் ரூ.2,266 கோடியும், போரேவேர் ப்ரேஸியஸ் ஜூவல்லரி & டைமெண்ட்ஸ் ரூ.1,001 கோடியும், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் லிட் ரூ.1,201 கோடி உட்பட பல நிறுவனங்கள் திரும்ப செலுத்தாமல் உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ