Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்ரி கமாடிட்டி

அக்ரி கமாடிட்டி

ஏலக்காய்!
கடந்த வாரத்தில் ஏலக்காய் சற்று ஏற்றமடைந்தாலும் பக்கவாட்டில்தான் வர்த்தகமானது. ஸ்பாட் சந்தையில் வர்த்தகர்கள் தரமான ஏலக்காய் ரகத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். அதுமட்டுமல்லாமல் ஏற்றுமதி ஆர்டர்களும் கணிசமாக இருந்து வந்தன.என்சிடிஇஎக்ஸ் சந்தையில் வியாழன் அன்று ஏலக்காய் ஜூலை ஃப்யூச்சர்ஸ் 1.20 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமானது.

இந்தப் பருவத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் வரத்து குறையும் என்பதால் தரமான ஏலக்காய்க்கான வரவேற்பு அதிகமாக இருக்கும். எனவே வரும் வாரத்தில் ஏலக்காய் விலை உயர்ந்து வர்த்தகமாகும்.

மஞ்சள்!
மஞ்சள் கடந்த வாரத்தில் ஏற்றத்தில் வர்த்தகமானது. நிசாமாபாத் சந்தையில் குவிண்டால் மஞ்சள் ரூ. 8550க்கு வர்த்தகமானது. உள்நாட்டு சந்தையில் மஞ்சளுக்கு தற்போது நல்ல டிமாண்ட் உள்ள நிலையில் ஏற்றுமதி ஆர்டர்களும் அதிகமாக உள்ளன. இதன் காரணமாக மஞ்சள் வர்த்தகத்தில் ஈடுபட முதலீட்டாளர்கள் போட்டி போடுவதால் அதன் விலை உயர்ந்து காணப்பட்டது.

தொடர்ந்து வரும் வாரத்திலும் மஞ்சளுக்கான தேவை சந்தையில் படுஜோராக இருக்கும் என்பதாலும், வெளிநாட்டு ஆர்டர்களும் அதிகரித்து வருவதாலும் நிச்சயம் விலை ஏற்றம் தொடரும் என்று நம்பலாம்.

ஜீரகம்!
கடந்த வாரத்தில் விலை ஏற்றமடைந்த ஜீரகம் லாப நோக்கில் வர்த்தகர்கர்கள் விற்றதன் காரணமாக சற்று தடுமாறியது. இதனால் ஜீரகத்துக்கு நல்ல டிமாண்ட் இருந்த நிலையிலும் ஃப்யூச்சர்ஸ் சற்று விலை குறைந்து வர்த்தகமாயின. ஆகஸ்ட் ஃப்யூச்சர்ஸ் 0.4 சதவிகிதம் குறைந்து குவிண்டால் ஜீரகம் ரூ. 19125-க்கு வர்த்தகமானது. வரும் வாரத்தில் ஜீரகத்துக்கு இருக்கு தேவையைப் பொறுத்து அதன் வர்த்தகம் இருக்கும்.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ