Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வரி வருமானம் உயர்வு: மத்திய அரசு தீவிர முயற்சி!

முந்தைய ஆண்டுகளில் கணக்கில் காட்டாத வருமானம் மற்றும் சொத்து விவரங்களை தானாக முன்வந்து தெரிவித்து 45% வரி கட்டும் திட்டத்தை ஒரு பக்கம் மத்திய அரசு அமல்படுத்தி வரும் நேரத்தில், பான் கார்ட் இல்லாமல் அதிக மதிப்பிலான பண பரிமாற்றங்களை மேற்கொண்டவர்களுக்கு இன்கம் டேக்ஸ் துறை நோட்டீஸ் அனுப்ப இருக்கிறது.
 
 
வங்கி சேமிப்பு கணக்கில் 10 லட்சம் ரூபாய் மேல் போட்டு வைத்திருப்பவர்கள், ரூ.30 லட்சத்துக்கு மேல் சொத்து வாங்கி அல்லது விற்றிருந்தால் அந்த விவரத்தை தெரிவித்து வரி கணக்கு தாக்கல் செய்த 7 லட்சம் பேர் நோட்டீஸ் அனுப்பப்பட இருக்கிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ