Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கனரா வங்கி: லாபம் 52% குறைந்தது!

தென் இந்தியாவின் முக்கிய அரசு பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் ஜூன் காலாண்டு முடிவு இன்று வெளியானது. கடந்த ஜுன் காலாண்டில் இந்த வங்கியின் லாபம் கிட்டத்தட்ட 52% குறைந்துள்ளனது. 
 
 
கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்த வங்கியானது 478.84 கோடி ரூபாய் லாபமாக சம்பாதித்தது. ஆனால், இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்த வங்கியின் லாபம் 220 கோடி ரூபாயாகக் குறைந்திருக்கிறது. 
 
வாராக் கடனுக்காக இந்த வங்கி சுமார் 3,905.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த வங்கியின் வாராக் கடன் 21,494 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் வாராக் கடன் 3.2% அதிகரித்துள்ளது. 
நிகர வட்டி வருமானமும் கடந்த ஆண்டின் இதே காலாண்டைவிடக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 2,516 கோடி ரூபாய் வந்தது. அதுவே இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 2,307 கோடியாக குறைந்துள்ளது.
 
இந்த வங்கி தந்த கடன் 0.9% குறைந்து 3.21 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த வங்கியின் டெபாசிட்டும் குறைந்துள்ளது. டெபாசிட் 1.4% குறைந்து 4.65% குறைந்துள்ளது. இந்த வங்கியின் காலாண்டு முடிவு மோசமாக வெளியாகி உள்ள நிலையிலும், இன்றைக்கு இந்த பங்கின் விலை ஏற்றத்திலேயே முடிந்திருக்கிறது. இந்த பங்கு விலை இன்று மட்டும் 5.31% உயர்ந்திருக்கிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ