Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜபாங் நிறு­வ­னத்தை கைப்பற்றியது ப்ளிப்கார்ட்!

ஆன்லைன் மூல­மாக பேஷன் பொருட்­களை விற்­பனை செய்து வரும் ஜபாங் நிறு­வ­னத்தை ப்ளிப்கார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.
 
 
தொடர் நஷ்டம் கார­ண­மாக குளோபல் பேஷன் குரூப் நிறு­வ­னத்­துக்கு சொந்­த­மான ஜபாங் நிறு­வ­னத்தை விற்கும் முயற்­சிகள் கடந்த ஓராண்­டா­கவே நடந்து வந்­தன. கடந்த 2015ம் ஆண்டில் இந்த நிறு­வ­னத்தின் மொத்த நஷ்டம் 46.7 கோடி ரூபாய். 2014ம் ஆண்டில் இந்­நி­று­வ­னத்தின் நஷ்டம், 159.5 கோடி ரூபாய் ஆக இருந்தது.
 
ஜபாங் நிறு­வ­னத்தைப் பொறுத்தவரை பியூச்சர் குரூப், ரிலையன்ஸ் ரீடெய்ல், ஆதித்ய பிர்லா குரூப், ஸ்நாப்டீல் உள்­ளிட்ட பல முன்னணி நிறு­வ­னங்கள் வங்­கு­வ­தற்­கான முயற்சியில் இறங்­கின. தற்­போது இந்த முயற்­சியில் ப்ளிப்கார்ட் வெற்றி பெற்­றி­ருக்கிறது. ப்ளிப்கார்ட்டுக்கு சொந்தமான மிந்த்ரா, ஜபாங் நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ