Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

Q1 ஏமாற்றம்; சரிந்தது சென்செக்ஸ்!

 
மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (26.07.16) காலை நேர வர்த்தகத்தில் சர்வதேச சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்ததால் ப்ளாட் ஆக வர்த்தகமானது. இந்த நிலையில் முதல் காலாண்டில் வெளியான நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் எதிர்பாரத அளவில் இல்லாத காரணத்தினால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய மாலை நேர முடிவில் சரிவை சந்தித்தன. டாக்டர் ரெட்டீஸ் லேபாராட்டரீநிறுவனத்தின் நிகர லாபம் 76 சதவிகிதம் சரிந்து 153.50 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 118.82 புள்ளிகள் சரிந்து  27,976.52 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 45.00 புள்ளிகள் சரிந்து  8590.65 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஆக்சிஸ் வங்கி 553.80 2.92%
யெஸ் பேங்க் 1,200.15 1.47%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 171.40 1.45%
டாடா ஸ்டீல் 367.80 1.14%
இன்போசிஸ் 1,088.70 0.73%
 
விலை குறைந்த பங்குகள்
 
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,319.65 -4.67%
ஹிண்டால்கோ 131.65 -2.63%
ஐசிஐசிஐ வங்கி 261.65 -2.61%
ஹீரோ மோட்டோகார்ப் 3,210.10 -2.13%
அரவிந்தர் ஃபார்ம் 784.10 -1.92%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ