Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அந்நிய முதலீடு உயர்வால் சந்தை அதிகரிப்பு!

 
காலை 10 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (27.07.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
நேற்றைய பங்குச்சந்தையைப் பொறுத்தவரை டாக்டர் ரெட்டீஸ் லேபாராட்டரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 76 சதவிகிதம் சரிந்து 153.50 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது.  முதல் காலாண்டில் நிதி நிலை முடிவுகள் எதிர்பாரத அளவில் இல்லாத காரணத்தினால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இன்றும் டாக்டர் லேபாராட்டரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 9% சரிவை சந்தித்து வருகின்றன.  இந்த நிலையில் இந்திய பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு அதிகரித்து வருவதால் சந்தை அதிகரித்து வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 222.61 புள்ளிகள் உயர்ந்து 28,199.37 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 71.70 புள்ளிகள் உயர்ந்து 8661.50 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐசிஐசிஐ வங்கி 272.20 4.03%
மாருதி சுசூகி 4,622.95 3.39%
ஜீ மகிழ்விக்க 489.90 3.23%
ஹெச்டிஎப்சி 1,396.25 2.11%
பி.எச்.இ.எல் 150.40 2.10%
 
விலை குறைந்த பங்குகள்
 
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,021.60 -8.98%
பஜாஜ் ஆட்டோ 2,650.65 -0.87%
யெஸ் பேங்க் 1,193.60 -0.55%
டாடா ஸ்டீல் 366.00 -0.49%
லூபின் 1,693.30 -0.39%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ