Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சூவல் ஃபண்ட் பிசினஸில் குதிக்கிறது யெஸ் பேங்க்; செபி கிரீன் சிக்னல்!

நம் நாட்டில் சொத்து மேலாண்மை மற்றும் மியூச்சூவல் ஃபண்ட் வணிகத்தை மேற்கொள்ள செபியிடம் இருந்து முன் அனுமதி யெஸ் பேங்க் பெற்றுள்ளது.
 
 
கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் யெஸ் பேங்க் மியூச்சூவல் ஃபண்ட் பிசினஸ் நடத்த இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்து இருந்தது. இந்த நிலையில் செபியிடம் இருந்து யெஸ் பேங்க் முன் அனுமதி பெற்றுள்ளது. செபியிடம் இருந்து இறுதி ஒப்புதலை பெறும் பட்சத்தில், யெஸ் பேங்க் நாட்டில் 44 வது மியூச்சூவல் ஃபண்ட் நிறுவனமாக இருக்கும். 
 
யெஸ் பேங்க் பொறுத்தவரை கடந்த 2015ல் மியூச்சூவல்  ஃபண்ட் நிறுவனத்தில் தடம் பதிக்க சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் வேறு ஒரு மியூச்சூவல் ஃபண்ட் நிறுவனத்தை வாங்காமல் சொந்தமாக மியூச்சூவல் ஃபண்ட் பிசினஸ் தொடங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ