Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கி மீதான குற்றச்சாட்டின் பின்னணியை ஆராய ரகுராம் ராஜன் வலியுறுத்தல்

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்,  ரிசர்வ் வங்கி மீதான குற்றச்சாட்டின் பின்னணியை ஆராய வேண்டும் என்று கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.
 
 
ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் 4-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரகுராம் ராஜன் பேசியதாவது:
 
எந்த அரசியல் உந்துதலும் இல்லாமல்தான், விலைவாசி அதிகரிக்கிறது. எனவே, நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருப்பதற்கான அமைப்புகளை ஏற்படுத்துவது அவசியமாகும். இதனாலேயே ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு சுதந்திரம் அளித்துள்ளது.
 
வட்டி விகிதத்தை அதிகமாக வைத்திருப்பதாகவும், வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. இது அடிப்படை ஆதாரமற்றது. ரிசர்வ் வங்கி மீதான குற்றச்சாட்டின் பின்னணியை ஆராய வேண்டும். ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ