Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜப்பானின் நடவடிக்கையால் இந்திய சந்தைகள் முன்னேற்றம்!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (27.07.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
ஜப்பானின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அந்நாட்டு மத்திய வங்கி ஊக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகிறது. இதன் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றத்தில் முடிவடைந்தன. டாக்டர் லேபாராட்டரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் குறைந்துள்ளதால் இன்றும் இந்த பங்குகள் விலை 10% வரை சரிவை சந்தித்தது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 47.81 புள்ளிகள் உயர்ந்து 28,024.33 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 25.15 புள்ளிகள் உயர்ந்து 8615.80 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பார்தி இன்ப்ராடெல் 380.55 4.72%
ஐசிஐசிஐ வங்கி 270.60 3.42%
ஜீ மகிழ்விக்க 487.85 2.80%
மாருதி சுசூகி 4,558.15 1.94%
அதானி துறைமுகங்கள் 228.70 1.92%
 
விலை குறைந்த பங்குகள்
 
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 2,980.20 -10.23%
ஐடிசி 247.40 -1.73%
ஐடியா செல்லுலார் 106.30 -1.53%
டாடா ஸ்டீல் 363.05 -1.29%
ரிலையன்ஸ் 1,013.10 -1.07%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ