Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க மத்திய வங்கி மீது நம்பிக்கை; இந்திய சந்தை அதிகரிப்பு

காலை 10 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (28.07.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
நேற்றைய பங்குச்சந்தையைப் பொறுத்தவரை ஜப்பானின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அந்நாட்டு மத்திய வங்கி ஊக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகிறது. இதன் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச்சந்தைகளும் நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றத்தில் முடிவடைந்தன.
 
இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் பல மாதமாக தாமதம் ஆகி வரும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை வரும் வாரங்களில் உயர்த்தாது; வரும் டிசம்பரில் மட்டுமே உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கருத்து நிலவுகிறது.
 
இது இந்திய பங்குச்சந்தைகளுக்கு சாதகமாக நிலவுவதால் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 90.31 புள்ளிகள் உயர்ந்து 28,114.21 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 22.00 புள்ளிகள் உயர்ந்து 8637.40 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,147.60 8,08%
பார்தி இன்ப்ராடெல் 392.05 3.02%
கோல் இந்தியா 330.95 1.66%
ஐடியா செல்லுலார் 107.85 1.46%
எய்கர் மோட்டார்ஸின் 20,621.25 1.38%
 
விலை குறைந்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா 492.40 -2,35%
டாடா ஸ்டீல் 356.90 -1.69%
டாடா மோட்டார்ஸ் (டி) 327.20 -1.04%
ஹெச்டிஎப்சி 1,376.15 -0.83%
இன்போசிஸ் 1,077.05 -0.76%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ