Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எப் அண்ட் ஒ எக்ஸ்பியரி மத்தியிலும் சந்தை சரவெடி!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (28.07.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் பல மாதமாக தாமதம் ஆகி வரும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை வரும் வாரங்களில் உயர்த்த வாய்ப்பில்லை; வரும் டிசம்பரில் மட்டுமே உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கருத்து நிலவி வருகிறது. இதுமட்டுமின்றி முதலீட்டாளர்கள் ப்ளூசிப் நிறுவன பங்குகளை ஆர்வத்துடன் வாங்கி குவித்ததாலும் மாதத்தின் இறுதி வியாழக்கிழமை எப் அண்ட் ஒ எக்ஸ்பியரி மத்தியிலும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைந்துள்ளது.  
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 184.29 புள்ளிகள் உயர்ந்து 28,208.62 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 50.50 புள்ளிகள் உயர்ந்து 8666.30 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,128.00 6.23%
பார்தி இன்ப்ராடெல் 400.00 5.11%
மாருதி சுசூகி 4,763.50 4.51%
எய்கர் மோட்டார்ஸின் 21,099.80 3.74%
ஐடிசி 254.30 2.79%
 
விலை குறைந்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா 485.55 -3.71%
டாடா ஸ்டீல் 349.85 -3.64%
அரவிந்தர் ஃபார்ம் 779.30 -1.93%
லார்சன் 1,577.25 -1.55%
அதானி துறைமுகங்கள் 225,25 -1.51%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ