Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய சந்தையால் இந்திய சந்தை சரிவு!

 
காலை 10.10 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (29.07.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
ஜிஎஸ்டி மசோதா, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாது என்ற நம்பிக்கை மற்றும் ப்ளூசிப் நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி குவித்ததால் நேற்றைய இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று காலையில் தொடங்கிய வர்த்தகம் ஆசிய பங்குச்சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 123.53 புள்ளிகள் சரிந்து 28,089.03 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 25.00 புள்ளிகள் சரிந்து  8641.60 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
எய்கர் மோட்டார்ஸின் 21,807.30 3.35%
பிபிசிஎல் 594.30 1.80%
பஜாஜ் ஆட்டோ 2,703.10 1.60%
டாடா ஸ்டீல் 354.55 1.34%
சிப்லா 526.80 1.18%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐசிஐசிஐ வங்கி 264.85 -2.63%
பி.எச்.இ.எல் 145.90 -2.38%
பார்தி ஏர்டெல் 365.45 -1.73%
ஹெச்டிஎப்சி 1,380.00 -1.58%
விப்ரோ 545.70 -1.46%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ