Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யாஹூவின் வீழ்ச்சியும் - யாஹூ தவறவிட்ட பொன்முட்டையும்!

ணையம் உலகை ஆளத்தொடங்கிய நாட்களில், யாஹூ 'இணைய உலகத்தை' ஆளத் தொடங்கியது. ஆனால், இந்த யாஹூவின் வீழ்ச்சி யாரும் எதிர்பார்க்காதது.
 
 
வளர்ச்சி - வீழ்ச்சி!
 
தொலைக்காட்சி மோகம் குறையத் தொடங்கிய காலத்தில் 1995-ல் தொடங்கப்பட்ட யாஹூவின் வளர்ச்சி அசுரத்தனமானது என்றால் தவறாகாது. 2000-ல் சந்தை முதலீட்டில் 125 பில்லியன் டாலர் மதிப்புடைய பங்குகள் கொண்டு சந்தை முதலீட்டில் முதல் இடத்தை அடைந்த யாஹூ, அதன் தொடர்ச்சியான மேம்படுத்துதல் இல்லாததாலும் மற்ற போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை கவனிக்கத் தவறியதாலும் இன்று 2016-ல் வெறும் 4.8 பில்லியன் டாலர்களுக்கு வெரிஸான் என்ற நிறுவனத்திடம் தன் பங்குகள் அனைத்தையும் (சீன, ஜப்பானிய பங்குகள் தவிர்த்து) விற்றுள்ளது.
 
வீழ்ச்சிக்கான காரணங்கள்:-
 
யாஹூவின் இவ்வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக முன்வைக்கப்படுபவை,
 
அதிர்ஷ்டத்தை அடையாளம் காணாதது
 
யாஹூ தொடங்கிய காலத்தில் முதலீட்டாளர்கள் போட்டி போட்டு யாஹூவில் முதலீடு செய்தனர். பணம் எளிதாக கிடைத்தது. கூகுள், பேஸ்புக் போல ஆரம்ப காலத்தில் ஒரு வலிமையான அடித்தளம் அமைக்க போராடவில்லை. வளர்ச்சியானது அதிர்ஷ்டத்தால் வந்ததென்பதை உணர மறுத்தனர்.
 
அதிமேதாவித்தனம்
 
ஆரம்பத்திலே கிடைத்த அபரிமித பணத்தினால் பிற நிறுவனங்களை வாங்கி நிர்வகிக்க தலைப்பட்டது யாஹூ. அவ்வாறு வாங்கப்பட்ட டமப்ள்ர்(tumblr) போன்ற நிறுவனங்கள் கடும் நட்டத்தையே யாஹூவிற்கு பரிசளித்தன.
 
மேம்பாடின்மை
 
கூகுள் தொடங்கப்பட்ட காலத்தில், யாஹூவின் யாஹூ மெயில் ஜிமெயிலிடமும், யாஹூ பதில்கள் குவோரா(quora)விடமும், ப்ளிக்கர் இண்ஸ்டாகிராமிடமும் தோற்றன. இத்தோல்விகளுக்கு முக்கிய காரணங்களாக முன்வைக்கப்படுபவை. தன் தேடுதளமான யாஹூவின் செயல்பாடுகளை மைக்ரோசாஃப்ட் அப்போதுதான் தொடங்கிய தேடுதளமான பிங்(bing)கின் வளர்ச்சிக்காக குறைத்துக் கொண்டதும், தொடர்ச்சியான மேம்படுத்துதல் இல்லாததும், திறமையான டெவலப்பர்களை(developers) பணி அமர்த்ததாதுமேயாகும்.
 
 
யாஹூ தவறவிட்ட பொன்முட்டைகள்!
 
2005-ல் யாஹூ குறைந்த விலையில்(1 பில்லியன்) கையகப்படுத்திய சீனாவின் முக்கிய வலைதளமான அலிபாபா(alibaba)வின் 40 சதவிகித பங்குகளின் பெரும் பகுதியை(35%) அவசர லாபத்திற்காக 2012-14 ஆண்டுகளில் விற்றது. விற்கப்பட்ட பங்குகளின் தறபோதைய மதிப்பு 80 பில்லியன் டாலர்கள் ஆகும். மீதமுள்ள 15% பங்குகள் லாபம்தான் என்றாலும், இது மிகப்பெரிய பொருளாதார சரிவு ஆகும்.
 
இதேபோல், 500 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை உடைய இணைய உலகின் நம்பர் 1 தேடுதளமான கூகுள் அதன் ஆரம்ப காலத்தில் யாஹூவிடம் தன்னை விற்க கேட்ட தொகை வெறும் 1 பில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால், அன்று யாஹூவால் உதாசீனப்படுத்தப்பட்ட கூகுள் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டதால் இன்று முதல் இடத்தில் உள்ளது.
 
புதிய நிறுவனங்கள் கற்க வேண்டிய பாடங்கள்
 
சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும்.
 
தொடங்கிய இடத்தை மறந்துவிடல் ஆகாது.
 
அவசர முடிவுகள் என்றும் ஆபத்தானவை.
 
வாய்ப்புகளை தவறான கணிப்புகளுக்கு பலி கொடுக்க கூடாது.
 
காலத்திற்கேற்ற மாற்றம் கட்டாயம்.
 
இதை புதிய நிறுவனங்கள் உணர்ந்து செயல்படத் தொடங்கினாலே வெற்றி பெறலாம். 
 
ரா.கலைச்செல்வன்
 
மாணவப் பத்திரிக்கையாளர்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ