Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரத்தின் இறுதி நாள்... 3 காரணங்களால் சரிந்த சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (29.07.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
ஜப்பான் மத்திய வங்கி ஊக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுபோன்ற எந்த ஒரு நடவடிக்கை இல்லாத காரணத்தினாலும், வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வங்கி பங்குகள் சரிவை சந்தித்த காரணத்தினாலும், முதலீட்டாளார்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை விற்பனை செய்த காரணத்தினாலும் இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் இறுதி நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் நிறைவடைந்துள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 156.76 புள்ளிகள் சரிந்து 28,051.86 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 27.80 புள்ளிகள் சரிந்து  8638.50 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
எய்கர் மோட்டார்ஸின் 22,460.85 6.45%
அதானி துறைமுகங்கள் 232.40 3.17%
ஜீ மகிழ்விக்க 497.30 2.57%
லூபின் 1,739.85 2.05%
டாடா பவர் 72.00 1.84%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐசிஐசிஐ வங்கி 262.90 -3.35%
பார்தி ஏர்டெல் 362.05 -2.65%
பி.எச்.இ.எல் 145.90 -2.38%
ஹெச்டிஎப்சி 1,374.50 -1.97%
பேங்க் ஆப் பரோடா 151.70 -1.81%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ