Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

 
இந்த வாரம் மஞ்சள், சீரகம் மற்றும் கடுகு குறித்து அலைஸ் ப்ளூ நிறுவனத்தின் தலைவர் கே.ராஜேஷ் விளக்குகிறார்.
 
மஞ்சள்!
 
மஞ்சள் ஆகஸ்ட் கான்ட்ராக்ட் கடந்த வாரம் அதிகபட்சமாக 8,382 வரையிலும், குறைந்தபட்சமாக 7,914 வரையிலும் சென்றது. மஞ்சளைப் பொறுத்தவரை, முதல் இரண்டு நாட்களில் விலை அதிகரித்து காணப்பட்டது. ஆனால், மஞ்சள் தேவை திடீரென குறைந்ததன் காரணமாக உடனடியாக இதன் விலை ஒரே நாளில் குறைந்தபட்சமாக 7,914 வரை சென்றது. எனினும், நீண்ட கால அடிப்படையில் ஈரோடு உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து சந்தைகளிலும் மஞ்சளின் தேவை அதிகரித்து வருகிறது. மஞ்சளின் விநியோகமும் வரம்புக்குள்ளேயே இருக்கிறது. டெக்னிக்கல் சார்ட்டின்படியும் மஞ்சள் விலை உயர அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், மஞ்சள் வரும் வாரங்களில் 7,828-க்கு குறையாதபட்சத்தில் 8,686 முதல் 9,480 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
 
சீரகம்!
 
சீரகம் ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட் கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 20,350-க்கும், குறைந்தபட்சமாக 19,180-க்கும் சென்றது. சந்தையில் திடீரென தேவை குறைந்த காரணத்தினால் சீரகத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. பருவமழையால் சீரகத்தின் விநியோகமும் அதிளவில் இருப்பதால், இதன் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்கல் சார்ட்படி, சீரகம் 19,000 என்ற நிலையை எட்டாதபட்சத்தில், 17,665 வரை குறைய வாய்ப்புள்ளது. 
 
கடுகு!
 
கடுகு ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட் கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 5,066-க்கும், குறைந்தபட்சமாக 4,873-க்கும் சென்றது. கடுகைப் பொறுத்தவரை, கடந்த வாரத்தில் இதன் தேவை ஒரே மாதிரியாக இருந்தது. ஆனால், பருவ மழையால் கடுகு உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலிருந்து இதன் விநியோகம் அதிகரித்து வருகிறது. ஆகையால் வரும் வாரங்களில் கடுகு விலை மேலும் குறைய அதிக வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி டெக்னிக்கல் அனாலிசிஸ்படி, வீக்லி சார்ட்டில் விலை குறைவதற்கான சார்ட் பேட்டன் பார்ம் ஆகி வருகிறது. எனவே, கடுகு 4,873-ஐ உடைக்கும்பட்சத்தில், வரும் வாரங்களில் இதன் விலை 4,769 முதல் 4,656 வரை குறைய வாய்ப்புள்ளது.
 
சோ.கார்த்திகேயன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ