Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபண்ட் முதலீடு: இவற்றில் கவனமாக இருங்கள்..!

எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம்.

முதலீட்டை மொத்தமாக மேற்கொள்ளாதீர்கள். குறிப்பிட்ட இடைவெளியில் பல்வேறு திட்டங்களில் பணத்தைப் போடுங்கள்.

ஒரு ஃபண்டில் முதலீடு செய்கிறோம். தொடர்ந்து 6 மாதங்கள் வரை அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் வேறு நல்ல ஃபண்டுக்கு மாறுவதுதான் புத்திசாலித்தனம். காத்திருப்பதற்கும் ஒரு எல்லை உண்டுதானே.!

ஒரு துறை சார்ந்த செக்டோரல் ஃபண்டுகளில் மட்டுமே முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்.

சந்தையின் சூட்சுமங்கள் புரியும்வரை புதியவர்கள் என்.எஃப்.ஓ-வில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். ஏற்கெனவே மார்க்கெட்டில் வெற்றிகரமாக வருமானம் தந்துகொண்டிருக்கும் ஃபண்டுகளே புதியவர்களுக்கான சிறந்த ஆப்ஷன்.
-

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ