Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேச சந்தையால் இந்திய சந்தை அதிகரிப்பு!

காலை 10.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (1.08.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் இறுதி நாளான கடந்த வெள்ளிக்கிழமை சரிவில் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று வர்த்தகம் தொடக்கத்தில் சர்வதேச பங்குச்சந்தை எழுச்சியுடன் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 219.60 புள்ளிகள் உயர்ந்து 28,271.10 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 69.35 புள்ளிகள் உயர்ந்து  8707.85 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டிசிஎஸ் 2,711.05 3.50%
ஹிண்டால்கோ 137.85 3.22%
விப்ரோ 559.25 2.61%
டாடா மோட்டார்ஸ் (டி) 331.65 2.54%
டாடா ஸ்டீல் 362.55 2.11%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐசிஐசிஐ வங்கி 257.30 -2.13%
டெக் மஹிந்திரா 482.50 -1.12%
லூபின் 1,725.50 -0.82%
கோடக் மகேந்திரா 760.90 -0.34%
லார்சன் 1,556.20 -0.17%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close