Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உடனடியாக கவர்னரை நியமிங்க; ரகுராம் ராஜன் மறைமுகமாக வலியுறுத்தல்!

இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய கவர்னரை உடனடிய நியமிக்க மத்திய அரசுக்கு ரகுராம் ராஜன் மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார்.
 
 
ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 4ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் மத்திய அரசாங்கம் நிதிக் கொள்கை குழுவை விரைவில் அமைத்திட ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு முன் நிதிக்கொள்கை குழுவை அமைத்திட அவர் வலியுறுத்தியுள்ளார். 
 
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் மற்றும் வட்டி விகிதங்கள் பற்றிய முடிவெடுப்பதில் ரிசர்வ் வங்கி கவர்னரின் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்தான் நிதிக்கொள்கை குழுவின் தலைவராக செயல்படுவார். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து வெளியேறும் முன் உடனடியாக புதிய கவர்னரை நியமிக்க அவர் வலியுறுத்தியுள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close