Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காலையில் ஜிவ்; மாலையில்..! சென்செக்ஸ் தடுமாற்றம்

 
மாலை 3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (1.08.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் காணப்பட்டது. சர்வதேச பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகம் மற்றும் ஜிஎஸ்டி மசோதா இந்த வாரம் கொண்டுவரப்படும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்தன.
 
இந்த நிலையில் ஜூலை மாத கார் விற்பனை, கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவு மற்றும் ப்ளூசிப் பங்குகளான ஐசிஐசிஐ வங்கி, லார்சன் அன்ட் டூப்ரோ, அதானி போர்ட்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்ததன் காரணமாக சந்தை இறக்கத்தை சந்தித்தது.  
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 48.74 புள்ளிகள் சரிந்து 28,003.12 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 1.95 புள்ளிகள் சரிந்து  8636.55 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹெச்சிஎல் டெக் 780.45 3.65%
டிசிஎஸ் 2,708.25 3.40%
டாடா ஸ்டீல் 364.85 2.76%
விப்ரோ 557.70 2.32%
ஹிண்டால்கோ 136.60 2.28%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐசிஐசிஐ வங்கி 249.50 -5.10%
லார்சன் 1,493.70 -4.18%
பி.எச்.இ.எல் 141.85 -2.78%
பேங்க் ஆப் பரோடா 147.50 -2.77%
அதானி துறைமுகங்கள் 228.55 -1.66%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP