Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாராக்கடன்களை விரைந்து மீட்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

வாராக்கடன்களை விரைந்து மீட்பதற்கான மசோதா நேற்று குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. வாராக்கடனை வசூலிப்பதற்காக வங்கிகள் மற்றும் நிதி  நிறுவனங்கள் தொடர்ந்த 70 ஆயிரம் வழக்குகள், கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளன.
 
 
இந்த பின்னணியில் இத்தகைய வாராக்கடன்களை விரைந்து மீட்பதற்கான மசோதா கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதா, நேற்று நாடாளுமன்றத்தில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் வங்கிகள் கொடுத்த கடனில் ரூ.8 லட்சம் கோடி வாராக்கடனாக இருக்கிறது. 
 
அதேசமயம் விவசாய கடன்களிலிருந்து இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், கல்விக்கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்றும், கடன் தள்ளுபடி என்பது, வங்கிகள் மேற்கொண்டு கடன் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளிவிடும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ