Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.251 ஸ்மார்ட் போன்: 65 ஆயிரம் பேருக்கு குலுக்கல் முறையில் டோர் டெலிவரி!

உலகிலேயே மிகவும் குறைந்த விலை ஸ்மார்ட்போனான ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் 251 ரூபாய் விலையுடைய ஸ்மார்ட்போனை 65 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
 
கடந்த சில தினங்கள் முன், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு 5 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை ரூ.251 விலையில் டோர் டெலிவரி ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் செய்தது. இந்த நிலையில், தற்போது மேலும் 65 ஆயிரம் ஸ்மார்ட்போன்களை டெலிவரி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், பிகார், உத்தராகண்ட், டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் போன்ற மாநிலங்களில் போன் சப்ளை செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களில் குலுக்கல் முறையில் தேர்வானவர்களுக்கு இந்த போன் அனுப்பப்படுவதாகவும், மற்ற வாடிக்கையாளர்களுக்கு விரைவில் போன் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ