Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாராக் கடன் அதிகரித்தபோதிலும் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 43 சதவிகிதம் அதிகரிப்பு!

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 43 சதவிகிதம் உயர்ந்து ரூ.307 கோடியாக அதிகரித்துள்ளது.
 
 
இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ரூ.215.28 கோடியாக இருந்தது. இந்த நிலையில் முந்தைய ஆண்டைவிட நடப்பு காலாண்டில் இவ்வங்கியின் நிகர லாபம் 42.27 சதவிகிதம் உயர்ந்து ரூ.307.36 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
இந்தியன் வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,512.96 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் ரூ.4,494.53 கோடியாக இருந்தது.  இந்தியன் வங்கியின் வாராக்கடன் ஜூன் காலாண்டு முடிவில் 4.48 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது 2015ம் ஆண்டு ஜூன் மாத முடிவில் 2.62 சதவிகிதம் அதிகரித்து இருந்தது. 
 
இந்தியன் வங்கியின் நிகர லாபம் 43 சதவிகிதம் அதிகரித்துள்ளதால் இன்றைய பங்குச்சந்தையில் இவ்வங்கியின் பங்குகள் 16 சதவிகிதத்துக்கும் மேல் வர்த்தகமாகி வருகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ