Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆட்டம் காட்டும் இந்திய பங்குச் சந்தை!


மாலை 3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (02.08.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
சர்வதேச சந்தை மந்தம் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவால் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ப்ளாட் ஆக ஓபன் ஆனது. எனினும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தில் நாளை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை, சாதகமான மேக்ரோ எக்னாமிக் டேட்டா மற்றும் பருவமழை நன்றாக பெய்யும் என்ற முன்னறிவிப்பு காரணமாக சந்தை அதிகரித்து காணப்பட்டது. ஆனால், இது வெகுநேரம் நீடிக்கவில்லை. முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகள் விற்பனை மற்றும் சர்வதேச சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமானதால் மாலை நேர முடிவில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 21.41 புள்ளிகள் சரிந்து 27,981.71 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 13.65 புள்ளிகள் சரிந்து  8622.90 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐடிசி 260.80 4.07%
ஹெச்சிஎல் டெக் 800.75 2.60%
பேங்க் ஆப் பரோடா 151.15 2.47%
மாருதி சுசூகி 4,986.05 2.46%
டெக் மஹிந்திரா 499.20 1.85%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஆரோபிந்தோ பார்மா 763.75 -3.05%
டாடா மோட்டார்ஸ் 493.30 -2.94%
அம்புஜா சிமென்ட்ஸ் 263.85 -2.64%
BPCL 579.35 -2.56%
டாடா மோட்டார்ஸ் (டி) 322.80 -2.34%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ