Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிஎஸ்டி நிறைவேறினால் சந்தை எப்படி? பங்குச் சந்தை நிபுணர் அண்ணாமலை கருத்து

ஜிஎஸ்டி மசோதா குறித்து பங்குச்சந்தை நிபுணர் அண்ணாமலை கூறுகையில், "ஜிஎஸ்டி வருகிறது, வருகிறது என்று கூறியே பங்குச்சந்தைகள் அதிகரித்துவிட்டது. ஆனால், ஜிஎஸ்டி மசோதாவில் ஏற்கனவே கூறப்பட்டதைவிட அதிகமாக வரி நிர்ணயிக்கப்பட்டால் பங்குச்சந்தை மேலும் கீழே இறங்கும். சந்தை கீழே இறங்கிய பின் லோயர் லெவலில் மீண்டும் சப்போர்ட் எடுத்து அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.  இன்றைய சந்தையைப் பொறுத்தவரை சந்தை சற்று கீழே இறங்கிய பின் மீண்டும் ஏற்றமடைய வாய்ப்பு இருக்கிறது. 
ஜிஎஸ்டி மசோதா தாக்கலாகும் பட்சத்தில் உள்கட்டமைப்பு, நுகர்வோர் சாதனங்கள், ஆட்டோ மொபைல் போன்ற துறைகளைச் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள்  அதிகரிக்கும். அதேசமயம் பார்மா, மெட்டல் போன்ற துறைகளைச் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் சற்று சரிய வாய்ப்புள்ளது. 
 
ஜிஎஸ்டி வரி 18 முதல் 20 சதவிகிதம் என நிர்ணயிக்கப்படும் பட்சத்தில்  சந்தையில் பெரிய அளவில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. ஆனால், ஜிஎஸ்டி வரி 20 சதவிகிதத்துக்கும் மேல் நிர்ணயிக்கப்படும்பட்சத்தில் சந்தை மேலும் கீழே இறங்க வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டி மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டால் அதன் தாக்கம் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரியும்" என்றார்.
 
காலை 11 மணி நிலவரம் - சந்தை
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 203.37 புள்ளிகள் சரிந்து 27,778.34 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 50.20 புள்ளிகள் சரிந்து  8571.30 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹெச்சிஎல் டெக் 822.00 2.65
பார்தி இன்ப்ராடெல் 395.55 2.02
ஐடியா செல்லுலார் 105.40 1.39 
கோல் இந்தியா 326.30 1.01
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,134.60 1.00
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடிசி 253.60 -2.76%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 175.05 -2.15%
ஹெச்யூஎல் 910.95 -1.77%
பி.எச்.இ.எல் 136.40 -1.62%
லூபின் 1,676.60 -1.49%
 
சோ.கார்த்திகேயன்
 
 கீழே ஜிஎஸ்டி வரி குறித்த ட்விட்டர் பதிவுகள் - 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ